அதிஷ்டத்திற்காக அனுஷாவாக மாறிய சுனைனா..

Filed under: சினிமா |

sunaina-photos-8893

நியுமராலஜிப்படி தன் பெயரை அனுஷா என மாற்றிக்கொண்டாராம் சுனைனா. காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுனைனா. பின்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் அமையாவிட்டாலும் சமீபத்தில் வெளியான சமர், நீர்பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார். சுனைனாவாக வலம் வந்த இவர் தற்போது அனுஷாவாக மாறியுள்ளாராம். காரணம் கேட்டால், நான் பிறந்தபோது எனக்கு குறிப்பிட்ட ஒரு எழுத்தில் முடியும்படி பெயர் வைக்குமாறு ஒரு பண்டிட் கூறினாராம். அதனால் எனக்கு சுனைனா என பெயர் வைத்தார்கள். இப்போது ஒரு பண்டிட்டிடம் என் ஜாதகத்தை காட்டியபோது ‘ஷா’ என்ற எழுத்தில் முடியும்படி பெயர் வைத்தால் எனக்கு நல்ல விடயங்கள் நடக்கும் என என் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அதனால் அவர்கள் விருப்பத்திற்காக ‘அனுஷா’ என எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் பெயர் மாற்றியதால் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. காரணம் வீட்டிலும், என் நண்பர்களும் என்னை செல்லப்பெயரில்தான் அழைப்பார்கள் என்கிறார் சுனைனா.