அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

Filed under: அரசியல் |

10 சதவீதம் உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தரும் மசோதா செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்ப்பு தமிழக அரசியல் கட்சிகள் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “மாதம் ரூ.66,660 மற்றும் தினமும் ரூபாய் 2222 சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை தூக்கி விடுவது தான் சமூக நீதியே தவிர இது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல. பொருளாதாரரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. சமூக கல்வி ரீதியாக வழங்குவது தான் சரியானது. ஜாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூக நீதிக் கொள்கை. இட ஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். ஏழை எளிய நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையை போக்கும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள் சமூகநீதி தத்துவத்தின் உண்மை விழுமியங்களை சிதைக்க அனுமதிக்க மாட்டோம். முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.