அனைத்து கட்சி கூட்டம் : எடப்பாடி பழனிசாமிக்கு மோடி அழைப்பு !

Filed under: இந்தியா,தமிழகம் |

சென்னை : இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஏப். 8-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளார்.
இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.