அபராதம் இருமடங்காகும்!

Filed under: இந்தியா |

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிடில் அபராதம் இருமடங்காக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண் இரண்டையும் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இன்றுக்குள் இரண்டையும் இணைக்காதவர்கள் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளது.

இந்த இரண்டையும் இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதன் பின்னர் இணைக்கப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 500 ரூபாய் அபராதத்துடன் ஆதார் பான் எண்ணை இணைப்பது இன்றே கடைசி என்றும் நாளை முதல் இரு மடங்கு அபராதம் அதாவது ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார், பான் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இன்றுக்குள் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.