அப்செட்டான அதிதி ஷங்கர்!

Filed under: சினிமா |

முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகிவிட்டார்.

முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக “விருமன்” படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கினார். படம் ஹிட் ஆச்சோ இல்லையோ அவரது அலப்பறைகள் தான் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாக பரவி வைரலானது. அந்த படத்தை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இப்படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவேண்டி கூறியிருக்கிறார். ஆனால், அதை இயக்குனர் காது கொடுத்து கேட்காததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதால் மிகப்பெரும் வெற்றியடையும் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றிவிட்டதாக வருத்தத்தில் உள்ளாராம்.