அப்பாவை இழந்தது இதயமே பிளந்தது போன்று இருந்தது.. !ராகுல்காந்தி

Filed under: அரசியல்,இந்தியா |

அப்பாவை இழந்து கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.

ராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரியில் கடலோர மக்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்களது குறை நிறைகளை கூறியதுடன், ராகுல் காந்தி அவர்களும் மக்களுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தும் பேசியுள்ளார்.

அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கில்லை. அப்பாவை இழந்து கடினமான தருணம்.

இதயமே பிளந்தது போன்ற உணர்வு இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன்.

வன்முறை மூலம் நம்மிடமிருந்து எதையும் எடுத்துவிட முடியாது. என்னுடைய தந்தை இப்போதும் என் மனதில் வாழ்கிறார். அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார்.