அமீர்கான் பட டிரெயிலர்!

Filed under: சினிமா |

நடிகர் அமீர்கானின் புதிய படம் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இறுதி போட்டியில் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாக உள்ளது.

ஹாலிவுட்டில் கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனம் பெற்ற படம் “பாரஸ்ட் கம்ப்” இத்திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். 27 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் இந்தியில் நடிக்கிறார். படத்திற்கு “லால் சிங் சத்தா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் கரீனா கபூர், நாகசைதன்யா உட்பட பலர் நடித்துள்ள நிலையில் ஷாரூக்கான் ஒரு கெஸ்ட் ரோலும் செய்துள்ளார். டிரெயிலர் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியின் இடைவெளியின்போது வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.