அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு நடைபெறவுள்ளதால், அமெரிக்கப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை இந்திய அரசு நீக்கீயுள்ளது. அதன்படி, கொண்டக்கடலை, பருப்பு, ஆப்பிள், வால் நட், பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.