அமேசான் பிரைமின் வெப் தொடரில் சமந்தா!

Filed under: சினிமா |

அமேசான் பிரைம் நடிகை சமந்தா நடிக்கும் புதிய வெப் தொடர் பற்றிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் நடிகை சமந்தா. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படத்திலோ மற்றும் விளம்பரங்களிலோ நடிக்கவில்லை. இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு சமந்தா பேமிலி மேன் இயக்குனர் ராஜ் & டி.கே. இயக்கத்தில் அமேசான் பிரைம் தயாரிக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.