சமந்தா போஸ்டர் இணையத்தில் வைரல்!

Filed under: சினிமா |

“சகுந்தலம்” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்தார். இவர் “புஷ்பா” படத்தில் கவர்ச்சியாக ஆடிய நடனம் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் தனது அடுத்தடுத் திரைப்படங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சமந்தா. அவருக்கு இன்று பிறந்தநாள்.

அவருடைய பிறந்த நாளான இன்று அவர் நடித்துள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீஸாகி பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. மேலும் அவர் நடிக்கும் “சகுந்தலம்” திரைப்படத்தின் அழகான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“சகுந்தலம்” படத்தை விஜய் 66 படத்தை தயாரிக்கும் தில் ராஜுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.