அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவிப்பு!

Filed under: அரசியல் |

அமைச்சர் எ.வ.வேலு கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் சுவர் உதிரும் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் தலையிட்டு முழுமையாக சரி செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு ஆகியோர் சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வு செய்தனர். செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 2016ம் ஆண்டு தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை கட்ட 78 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது.

2019ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2020ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வர இருந்தது ஆனால் கொரோனா சமயத்தில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தேசிய முதியோர் நல மருத்துவ மையமாக மாற்றலாம் என்று நினைத்த பொழுது இங்கு இருக்கும் சுவர் அனைத்தும் உதிரத் தொடங்கியது. எனவே இந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய ஐஐடி கட்டிட பொறியியல் துறை தலைவர் மனுசந்தானம் தலைமையில் மே மாதம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்டு முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தார்கள். அறிக்கையில் கட்டட உறுதி தன்மை நன்றாக உள்ளது என்றும் ஆனால் பூசி வேலை மட்டுமே சரியாக இல்லை என்று தெரியவந்தது. எம் சாண்டில் ரசாயனம் சரியாக கலந்து பூசி வேலை செய்யாததாலும் தண்ணீர் சரியாக ஊற்றாததாலும் தான் இதுபோன்று உதவுகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் அந்த அந்தக் குழு மூன்று பரிந்துரைகளை முன் வைத்தது. எம் சாண்டில் ரசாயனம் கலந்து பூச்சு வேலையில் ஈடுபட வேண்டும். இந்த மருத்துவ மையம் ஒட்டி மழை நீர் வடிகால் சென்று கொண்டிருக்கிறது. அதை 2 அடி சற்று தள்ளி வைக்க வேண்டும். பூச்சு வேலை முடிந்த பிறகு தண்ணீர் சரியாக ஊற்றி ஈரப்பதம் 200 சதவீதமாக இருக்க வேண்டும், ஆகிய மூன்று பரிந்துரைகளை முன் வைத்தது.