அமைச்சர் சுரேஷ் காதே மோடிக்கு புகழாரம்!

Filed under: அரசியல்,இந்தியா |

மத்திய அமைச்சர் என்று சுரேஷ் காதே பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் அவரது உறவினர்களை தோற்கடிக்கவே முடியாது” என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் சுரேஷ் காதே, “பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாதவர்தான் சரத்பவார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்திரா காந்தி ஆகியோர் காலத்தில் சரத்பவார் தோல்வியடைந்தார். ஆனால் பிரதமர் மோடி ஒருபோதும் தோற்க மாட்டார். முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்கே அத்வானி அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று தோல்வி அடையாதவராக உள்ளார். அதேபோல் மோடியும் தோல்வியையே கண்டிராதவர். அவரை தோற்கடிக்க இந்தியாவில் யாருமில்லை. அவர் இந்தியாவின் ஆன்மா, அவர் மக்களின் இதயங்களில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.