அமைச்சர் பொன்முடியின் வருத்தம்!

Filed under: அரசியல் |

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்து “ஓசி” என்று பேசியது தவறுதான் என்று வருந்தியுள்ளார்.

திமுக அமைச்சர்கள் பலரும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இது மக்களிடையேயும் சில அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்திருந்தார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி மற்றும் துரைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி “இப்போதெல்லாம் ‘வாயா போயா’ என பேசவே பயமாக இருக்கிறது. பாஜக டார்கெட் செய்து அரசியல் செய்கிறார்கள். ஒரு வார்த்தையை பிடித்துக் கொள்கிறார்கள். முதலமைச்சரும் இதுபோன்று பேச வேண்டாம் என என்னை அறிவுறுத்தினார். உண்மையில் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் உண்மையாகவே வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.