அயோத்தியில் பரபரப்பு!

Filed under: இந்தியா |

தம்பதியர் அயோத்தியில் உள்ள சரயு நதியில் குளித்துள்ளனர். அவர்களின் செய்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் தம்பதியரை சரமாரியாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் பிறந்த பகுதியாக கருதப்படும் அயோத்தியில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இங்குள்ள சரயு நதி புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அயோத்தி கோவில்களுக்கு வருபவர்கள் சரயு நதியில் நீராடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நதியில் நீராட தம்பதியர் ஒருவர் வந்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக தண்ணீரில் இருப்பதை கண்ட சக நீராடியவர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொள்வதையும், தண்ணீரில் தவறாக நடந்து கொள்வதையும் கவனித்ததாக தெரிகிறது. புனித நதியில் இருவரும் தவறாக நடந்து கொண்டதாக ஆத்திரமடைந்தவர்கள் அந்த ஆண் நபரை மூர்க்கமாக தாக்க தொடங்கியுள்ளனர். இதனால் இருவரும் தண்ணீரில் இருந்து எழுந்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.