தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் எனக்கு யாரும் நண்பர்களும் கிடையாது எதிரிகளும் கிடையாது என்று கூறியுள்ளார்.
இன்று டில்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேலு நடித்த 23ம் புலிகேசி படம் போல் இருக்கிறது. சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகிறார்கள் என்று தினமும் கேட்டு அவர்களை கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள் குழந்தைகள் மீது வன்பத்தை காட்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்ல அரசியலாக நான் பார்க்கிறேன். கூட்டணி கட்சி யாராக இருந்தாலும் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் என்றும் அரசியலைப் பொறுத்தவரை எனக்கு யாரும் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை. மற்ற கட்சிகளை வளர்ப்பதற்கு நான் ஆள் இல்லை” என்று அவர் கூறினார்.