அர்ஜூன் சம்பத்தின் கருத்து!

Filed under: அரசியல் |

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் திருமாவளவள், சீமான் கட்சிகளை தடை செய்வதோடு, இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் பேசி வருவதாகவும் இதையடுத்து இருவரையும் கைது செய்து அந்த இருவருடைய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவன் சீமான் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோஷத்தையும் இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள் எழுப்பினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்த பின்னரும் திருமாவளவன் சீமான் உள்ளிட்டோர் அந்த அமைப்பை ஆதரித்து பேசி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.