அர்ஜூன் சம்பத் பேச்சால் சர்ச்சை!

Filed under: அரசியல் |

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சேர்ந்தவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே தமிழ்நாட்டை தமிழ்நாடு, கொங்குநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “தனித்தமிழ்நாடு என்ற பிரிவினை வாதம் தவறானது. ஆனால், நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்றாக பிரிப்பதில் எவ்வித தவறுமில்லை” என்று அவர் கூறியுள்ளார். தமிழகம் விரைவில் பிரிக்கப்படுவது உறுதி என்றும், ஆனால் அது இரண்டு அல்லது மூன்று என்பதுதான் தற்போது பிரச்சினை இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.