அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து!

Filed under: இந்தியா |

அலகாபாத் உயர்நீதிமன்றம் பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மேலும் கூறிய போது பசுவை கொல்பவர்கள் மற்றும் பசுவை கொல்வதை அனுபதிப்பவர்கள் நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தனர். மேலும் நாட்டில் பசுவதையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அனைத்து மதத்தின் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் பசுவை இந்து மதத்தினர் தெய்வமாக கருதும் விலங்கு என்பதால் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.