அழகான பெண்கள் பட்டியலில்இந்திய நடிகை!

Filed under: சினிமா |

இந்திய நடிகை ஒருவர் உலகின் மிக அழகான பெண்கள் என்ற பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனம் உலகளவில் அழகான பெண்கள் குறித்த பட்டியலை ஒன்று பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெண்களின் காது, மூக்கு முக அமைப்பு உள்பட 12 விதமான விஷயங்கள் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் அழகு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் 2022ம் ஆண்டின் டாப் 10 அழகான பெண்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜோடி காமர் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.