ஆட்டம் காட்ட இருக்கும் நிவர் புயல்…24 மணி நேரத்தில் அதித்தீவிரம்

அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளாத தகவல் மேலும் புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என்று தகவல்.
மணிக்கு 5 கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருவதாகவும் தலவல்.

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வரை காற்றின் வேகம் இருப்பதாகவும் தகவல்.

புதுச்சேரி அருகே நாளை மாலை கரையை கடக்கும் போது அதிதீவிர புயலாக இருக்கும்.

புயல் கரையை கடக்கும் போது 145கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

இந்த புயலின் தன்மை மாறி அதி தீவிரப்புயலாகவும் நிவர் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தலவல்

மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்றுடன் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் காற்றின் வேகம் 145கிமீ வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.