ஜூன் 19
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோடு குமரன் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயபவுல் சர்ச் ஆயர் வில்சன்குமார், சர்ச் நிர்வாக கமிட்டியினர் மற்றும் சமாதான தூதுவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சர்ச்சில் சமாதான கூட்டம் நடைபெறுகிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் சமாதான கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரேயர் செய்து முடித்துவிட்டு, மீட்டிங் ஆரம்பமானது. இதில், நிர்வாகக் கமிட்டி சில உறுப்பினர்களும், சமாதான பார்ட்டிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஆயர் வில்சன்குமார் சர்ச்சில் நடக்கும் தகவல்கள் வெளியே பத்திரிக்கைகளுக்கு செல்கின்றன. அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். இனிமேல் போலீஸ் வழக்குகள் வேண்டாம். சர்ச் வாட்ச்மேனை நீக்க வேண்டும் என்று இந்த மூன்று விஷயங்களை நிர்வாக கமிட்டியிடம் முன்மொழிந்தார். அத்துடன், சில பேர் சர்ச்சில் நடக்கும் விஷயங்களை வீடியோ எடுத்து போலீசுக்கு அனுப்புகிறார்கள், என்னால் சபையை நடத்த முடியவில்லை என்று ஆயர் வில்சன்குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
அப்போது, சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உப்புகாரன் மீது 130 பக்க அறிக்கை உள்ளது அந்தக் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் போட்டு தாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பேசினார்கள். அப்போது, ஆயர் வில்சன்குமார் சரிங்கய்யா என்று பூசி மொழுகினாராம். இப்படி, உப்புசப்பில்லாத விஷயங்களைப் பேசி முடிவுக்கு வந்த சமாதான கூட்டம் ஏதோ ஒரு வழியாக நிறைவடைந்தது. பின்பு, கோவை சி.எஸ்.ஐ. திரு மண்டலத்திலுள்ள முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு நபரிடம் பேசிய ஆயர் வில்சன்குமார் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்த்தார்.
நாம், சமாதானக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஒருவரை நேரில் சந்தித்து விவரம் கேட்டபோது, சார்… ஆயர் வில்சன் குமார் காசுக்காக புறா விக்கிற வியாபாரியை போன்று செயல்பட்டு இன்று தேவாலயத்தை கள்ளர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார். தற்போது, பிசாசுக்கு அடிமையாகி சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆயர் வில்சன்குமார், தனது வீட்டிற்கு புதிய சமையல் கலைஞர்களை தேர்வு செய்து ருசியாக சாப்பிட்டு கொண்டு வருகிறார். இந்த சமையல் கலைஞர்களை வில்சன்குமார் தேர்வு செய்தது உப்புகாரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். சமையலர் எப்போது ஆயர் வீட்டுக்கு வந்து போகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க உப்புகாரன் சர்ச் வாட்ச்மேனிடம் தூண்டில் போட்டு தகவலை கேட்டு வாங்கிவிடுகிறார். ஆயர் வில்சன்குமாரின் அன்றாட நடவடிக்கைகளை லைவாக தகவலைப் பெறும் உப்புகாரன் அதற்கு தகுந்தார்போல் ஆயர் வில்சன்குமாரை தனது வலையில் சிக்க வைத்துவிடுகிறார்.
அத்துடன், ஆயர் வில்சன்குமாரின் அஜால் குஜால் வேலைகளையும் அவரது வருமானம் ஈட்டும் வழிகளை உப்புகாரனுக்கு நன்றாக தெரியும் என்பதால் ஆயரால் உப்புகாரனை விட்டு விலக முடியாமலும், அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியாமல் பொறியில் சிக்கிய எலியாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்.தற்போது, ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால், ஆட்டோ ஓட்டுவதில் ஆயர் வில்சன்குமாருக்கும் உப்புகாரனுக்கும் மறைமுகப் பனிப்போர் உச்சகட்டத்தில் நடந்து வருகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆயர் வில்சன்குமாரும் இந்த உப்புகாரனும் இங்கு இருக்கும் வரை சி.எஸ்.ஐ. தூயபவுல் ஆலயம் உருப்படாது.! என்று நம்மிடத்தில் மேற்படி தகவலை கூறினார்.ஆயர் வில்சன்குமாரின் பதவியை காவு கேட்கும் விதமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச் விவகாரத்தில் நடந்த கட்டுமான ஊழல்களை விசாரிப்பதற்காக மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ. சர்ச் விசுவாசி ஒருவரை அலைபேசி வழியாக நாம் தொடர்பு கொண்டபோது… எதிர்முனையில் பேசிய அந்த கர்த்தரின் விசுவாசி ஐயா பல ஆதாரப்பூர்வமான டாக்குமென்ட் என்னிடத்தில் உள்ளன, ஒரு சில நாட்களில் உங்களை நேரில் சந்திக்கிறேன் என்று தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
கன்னித்தீவு சிந்துபாத் லைலா கதையை போன்று சென்று கொண்டிருக்கிறது திருப்பூர் சி.எஸ்.ஐ. தூயபவுல் ஆலயத்தில் நடந்துவரும் ஆயர் வில்சன்குமாரின் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆயர் வில்சன்குமார் மனம் திருந்தவும் கர்த்தரிடம் மண்டியிட்டு மன்றாடுகிறார்கள் கர்த்தரின் சபை விசுவாசிகள்.!