ஆதாரமில்லாமல் சோதனையா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று காலை முதல் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் கடந்த 2011ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது, அமலாக்க துறையை அதிகாரிகளின் சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன சம்பந்தம் என்பது போல எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அமலாக்கத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.