ஆதிபுருஷ் டிரெயிலர்!

Filed under: சினிமா |

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பிரபாஸ் நடிப்பில் தயாராகிய “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது.


இதிகாச திரைப்படமான “ஆதிபுருஷ்”ல் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் அனைத்து இந்திய மொழிகளிலும் கடந்த ஆண்டில் வெளியானது. ஆனால் அனிமேஷன் படமான இதன் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மீண்டும் தொடங்கியதால் பட ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. பல கட்ட அனிமேஷன், கிராபிக்ஸ் பணிகள் முடிந்து பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான ஆதிபுருஷ் டிரெயிலர் ஏமாற்றாமல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. கதாப்பாத்திரங்கள் அனைத்தும் லைவ் ஆக்‌ஷன் படங்களில் தோன்றுவது போலவே உள்ளனர். பின்னணி கிராபிக் காட்சிகள், விஷுவல் எஃபெக்ட்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஜூன் 16ம் தேதி 3டியில் வெளியாகும் இந்த “ஆதிபுருஷ்” குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.