டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டைக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. இவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இரண்டாவது மகள் ஆகியோருக்கு சில ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. முகேஷ் அம்பானி- மற்றும் நிதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும், வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும் இன்று ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில், இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். ஆனந்த் அம்பானி திருமணம் செய்யப்போகும் ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரும், ஹெல்த்கேர் நிறுவனத்தில் தற்போது இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
Related posts:
பெங்களூருவை அடுத்த மத்துரம்மா கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விப...
இந்தியாவின் மேற்கு பிரிவு விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமனம்!
ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !
அசாம் மாநிலத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!