கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 425 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு – அதிர்ச்சியில் டெல்லி!

Filed under: இந்தியா |

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சென்ற 24 மணி நேரத்தில் புதியதாக 425 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனை டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 123பேர் உயிரிழந்துள்ளனர்.