முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என பேசியுள்ளார்.
இன்று வள்ளலாரின் முப்பெருவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுக அல்லது திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிராகதான் திமுக குரல் கொடுக்கும்” என்று கூறினார். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு தபால் உறையை வெளியிட்டார்.