ஆன்லைன் லாட்டரிக்கு ரூ.44 கோடி பரிசு

Filed under: இந்தியா |

பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு விழுந்துள்ளது. பரிசு பெற்ற நபர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்.

பெங்களூரை சேர்ந்த அருண்குமார் ஆன்லைன் மூலம் வளைகுடா நாடான அபுதாபியில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். கடந்த 3ம் தேதி குலுக்கல் நடைபெற்ற போது அதில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாய் பரிசு அருண்குமாருக்கு கிடைத்தது. இதனிடம் அவரிடம் தெரிவிப்பதற்காக லாட்டரி நிறுவனம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஆன்லைன் மோசடி நிறுவனமாக இருக்கும் என்று நினைத்து அந்த எண்ணை அவர் பிளாக் செய்துவிட்டார். அதன்பின்னர் அவரை வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்றும் நேரடியாகவோ அல்லது வங்கி மூலமாகவோ அந்த பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து அருண்குமார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.