ஆயுதகிடங்கில் வெடிவிபத்து!

Filed under: உலகம் |

ஆயுத கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான அபியனில் இருக்கும் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏமனின் லாடர் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகளால் இந்த நகரம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் இது குறித்து மேலும் கூறும் போது, “இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். யாரும் இந்த வெடி விபத்துக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இக்கிடங்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமிக்க பயன்படுத்தப்பட்டது. இவை பொதுவாக லாடரில் உள்ள சந்தையில் விற்கப்படுகின்றன.