ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஒத்திவைப்பு!

Filed under: தமிழகம் |

நாளை தமிழகம் முழுதும் 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அதனால் நாளை நடைபெற நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நான்கு சுவர்களுக்குள் நடத்த நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்றும் காஷ்மீர் கேரளா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அணிவகுப்பு பொதுவெளியில் தான் நடைபெற்றது என்றும் தென்மண்டல மேலாளர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.