ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனம்!

Filed under: அரசியல் |

முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் “ஒருநாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை” என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சென்னையில் மழை நீர் வடிகால் பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதனால் ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை போன்ற வசதிகளை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.