ஆர்.பி.உதயக்குமார் கைது!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஆர்.பி.உதயக்குமாரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இந்தியா முழுதும் தமிழகத்தில்தான் அதிகமான சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. மதுரையிலிருந்து திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கப்பலூர் அருகே சுங்கச்சாவடி செயல்படுகிறது. சமீபத்தில் தமிழக அரசால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 5 சுங்கச்சாவடிகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல கப்பலூர் சுங்கச்சாவடியையும் மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் சுங்கச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.