ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்!

Filed under: அரசியல்,சென்னை |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது, ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசுதான்” என்று பேசினார். அதற்கு முன்னதாக பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் வருகை தந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்.