ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வு அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

ஆவின் நிர்வாகம் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஒரு லிட்டர் பிரிமியம் நெய் 630 ரூபாயிலிருந்து ரூ.680 என அதிகரித்தது. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று முறை ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கிராம் ஆவின் வெண்ணெய் 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது 260 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.