ஆவின் பால் விலை உயர்வு?

Filed under: தமிழகம் |

பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் பிரீமியம் பால் பாக்கெட்டின் விலையை தற்போது உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் சமீப காலமாக பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளன. இவ்வாண்டில் மட்டும் 4 முறை தனியார் பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டுமென ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கைகள் விடுத்துள்ளனர். அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை ஈடுசெய்ய ஆவினின் பிரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற பிரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாதாந்திர அட்டை தாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இது அதிர்ச்சியான விஷயம்தான்.