ஆ.ராசா நாக்கை வெட்ட விளம்பரம் செய்த நபர் கைது!

Filed under: தமிழகம் |

மதுரையைச் சேர்ந்த ஒருவர் “ஆ.ராசா நாக்கை வெட்டினால் பரிசு!” என்று விளம்பரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படை என்ற அமைப்பை சேர்ந்த கண்ணன் என்றவர், திமுக எம்பி ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவரது நாக்கை வெட்டி கொண்டு வந்தால் ரூ.1 கோடி பணமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என முகநூலில் பதிவிட்டார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.