இசை ஆல்பத்திற்கு இத்தனை கோடியா?

Filed under: சினிமா |

நடனப்புயல் என்றழைக்கப்படும் பிரபுதேவா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக பல கோடிகளில் ஆல்பம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபபத்தில் பின்னணி பாடகர்கள் மற்றும் முக்கிய திரைப்பிரபலங்கள் ஆல்பம் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது. இந்த ஆல்பம் பிரம்மாண்டமாக ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்த பாடலை இயக்கி, பிரபுதேவாவே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படுவது ஆச்சர்யமாக திரைத்துறையினர் பலராலும் பார்க்கப்படுகிறது.