துபாயில் லாட்டரி குலுக்கலில் வென்ற இந்தியர் – பரிசு தொகை இத்தனை கோடியா!

Filed under: உலகம் |

துபாயில் லாட்டரி குலுக்கலில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார். அது இந்திய மதிப்பில் 24.5 கோடி ரூபாயாகும்.

இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் தீபன் கர் டே. தீபன் கடந்த 9 வருடத்துக்கும் மேல் துபாயில் அவருடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபாய் நாட்டில் மிகவும் பிரபலமான மெகா பிக் டிக்கெட் என்கிற லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். நேற்று நடைபெற்ற குழுக்களில் அவருக்கு முதல் பரிசாக 24.51 ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ளது.

இதைப்பற்றி தீபன்கர் டே கூறியது: துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கண்பார்வை பரிசோதனை செய்யும் வேலையை பாத்து வருகிறேன். அதில் எனக்கு 9,000 டாலர் சம்பாலம் கிடைக்கிறது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் பலர் வேலையை இழந்து வருகிறார். இந்த சமயத்தில் எனக்கு பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‌

இந்த 24.5 கோடி ரூபாயை என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்கள் என 11 பேருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ‌இந்த பரிசுத்தொகை பணத்தில் என்னுடைய மகளுக்கு சிறப்பான கல்வியை அமைத்து தர இருக்கிறேன் .

இவ்வாறு தீபன் தெரிவித்துள்ளார்.