இணையதளத்தின் மூலம் பாலியல் தொல்லை!

Filed under: சென்னை |

முக்கியமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்புப் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரைக் காணவில்லை என மாணவியின் தந்தை போலீஸில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவி பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீசார், மாமல்லபுரம் பகுதியில் அப்பெண் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே, அங்கு சென்று விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர். மாணவியை கடத்தி வந்து பாலியல்தொல்லை கொடுத்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.