‘இந்தியன் 2’ இன்ட்ரோ வீடியோ டிரெண்டிங்!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தின் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

இந்த இன்ட்ரோ வீடியோவில் சுமார் இரண்டு நிமிடங்கள் இருக்கும் ஷங்கரின் அபாரமான இயக்கம், ஆச்சரியம் அளிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள், இறுதியில் கமல்ஹாசனின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கெட் அப் என பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. முதல் பாகம் போலவே இந்த பாகத்தில் லஞ்ச ஊழலை ஷங்கர் கையில் எடுத்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. மொத்தத்தில் காட்சிகளில் பிரம்மாண்டம், அனிருத் பிரம்மிக்க வைக்கும் பின்னணி இசை, ஷங்கரின் இயக்கம், லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பு என இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.