இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கின்றார்.

பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அதிவேக இன்டர்நெட் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கயிருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.