பீகாரின் சிறப்புமிக்க கோசி ரயில் பலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

பீகார் மாநிலத்தின் கோசி ரயில்வே பாலம் உள்பட பல ரயில்வே திட்டங்களின் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பீகார் மாநிலத்தின் கோசி ஆற்றின் மீது ரூபாய் 516 கோடி மதிப்பில் கட்டிய 1.9 கிலோமீட்டர் தூரமான ரயில்வே பாலத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனை போலவே மின்சார ரயில் எஞ்சின் பணிமனை, மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் பல திட்டங்களை துவங்கி வைத்தார்.

காணொலி கட்சி மூலம் திறந்து வைத்து பின்பு பேசிய பிரதமர் மோடி, இன்று ரூபாய்3,000 கோடி மதிப்பீட்டில் துவங்கி வைத்திருக்கும், இந்த திட்டங்கள் பீகார் ரயில்வே இணைப்யும் மற்றும் கிழக்கிந்தியாவின் ரயில்வே கட்டமைப்பு ரயில் இணைப்பையும் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு ஆண்டில், புதிய இந்தியாவின் எண்ணங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் எதிர்பார்ப்புகள் கொண்டு ரயில்வேதுறையை மேம்படுத்த பணிகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.