இந்தியாவில் புதிதாக 20,799 பேருக்கு கொரோனா!

Filed under: இந்தியா |

புதுடெல்லி, அக் 4:
நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 20,799 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ominous blue coronavirus cells intertwined with DNA and white blood cells on dark

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 20,799 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,31,21,247ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரே நாளில், 180 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 4,48,997 ஆக உயர்ந்துள்ளது. 2,64,458 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை, 90,79,32,861 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.