இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இன்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. சிஏஜியால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவில் கைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவோம். நாளைய இந்தியா நம் வசமே. இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில் திமுகவின் பங்கு மகத்தானது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம், ஜன நாயகம் காப்பதில் உறுதியாகவுள்ள தோழமை கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.