இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை!

Filed under: உலகம் |

இந்தோனேஷியாவில் தீவு ஒன்றில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

குட்டிக் குட்டித் தீவுகள் உள்ள இந்தோனேஷியாவில் கணிசமான அளவில் வெடிக்கும் நிலையில் எரிமலைகளும் உள்ளன. நிலத்தகடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளதால் அடிக்கடி இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நடக்கிறது. கடந்த 16ம் தேதி ருயாங்க் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று மீண்டும் ருயாங் தீவில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இம்முறை வெடிப்பு தீவிரமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.