இனி பாட்டிலில் பெட்ரோல் கிடையாது!

Filed under: தமிழகம் |

இனி பாட்டிலில் பெட்ரோல் தரப்படமாட்டாது என தமிழகத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் வீடுகள், வாகனங்கள் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளிகளை தேடி கைது செய்து வருகிறது. இச்சம்பவங்களால் தமிழகம் முழுதும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலி பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் நிரப்பி தரப்படாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிக சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.