இனி மாஸ்க் கட்டாயம்!

Filed under: தமிழகம் |

மீண்டும் கொரோனா பாதிப்புகள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. டில்லியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்ததப்பட்டு வருகின்றன. இது குறித்து டில்லி கவர்னருடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பதால், தொற்று நடைமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய மா.சுப்பிரமணியன், “நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஆனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் இல்லை. தமிழகத்தில் முக‌க் கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக‌க்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.