கொரோனாவிற்காக தமிழக அரசு ரூ.7,167.8 கோடி செலவு – துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம்!

Filed under: தமிழகம் |

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ரூபாய்.7,167.97 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்கருவிகளுக்கு ரூபாய் 830.60 கோடியும், கட்டமைப்பு வேலைக்காக ரூபாய் 147.10 கோடியும் மற்றும் புதிய பணியாளர்களின் ஊதியத்திற்க்கு ரூபாய் 243.50 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பின்பு, கொரோனா தடுப்பு சிகிசைக்கு ரூபாய் 638.85 கோடியும், தனிமைப்படுத்தல் பணிக்கு ரூபாய் 262.25 கோடியும் மற்றும் வெளிமாநில தொழிலாளர் நிதிக்குரூபாய் 143.63 கோடியும் மற்றும் செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், நியாய விலை அட்டைத்தாரர்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் நல வாரியத்துக்காக நல திட்டம் கொடுத்தது ஆகியவற்றுக்கு ரூபாய் 4,896.05 கோடி என மொத்தம் கொரோனா தடுப்பு வேலைக்காக 7,167.97 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.