இன்று பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கல்!

Filed under: தமிழகம் |

இன்று முதல் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ம் வகுப்புக்கு பொது தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளை சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. லீttஜீs://ஷ்ஷ்ஷ்.பீரீமீ1.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தற்போது பதினோராம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.