இயக்குனராக அவதாரமெடுக்கும் எஸ்டிஆர்!

Filed under: சினிமா |

தான் அடுத்ததாக படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் சிம்பு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்த பிறகு “மாநாடு” திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றி இடத்தை கைப்பற்றியுள்ளார். அதையடுத்து அவர் தற்போது நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், “வெந்து தணிந்தது காடு என்னுடைய 47வது படம். 50வது படம் முடிந்தவுடன் நான் மீண்டும் இயக்குனராகும் எண்ணமுள்ளது. என் மனதுக்குள் சில திரைக்கதைகள் உள்ளன” என்று பேசியுள்ளார். ஏற்கனவே சிம்பு “மன்மதன்” படத்துக்கு கதை எழுதியது மட்டுமில்லாமல் “வல்லவன்” திரைப்படத்தை இயக்கியும் உள்ளார்.