இயக்குனருக்கு காரைப் பரிசளித்த கார்த்தி!

Filed under: சினிமா |

கார்த்தி நடிப்பில் “சர்தார்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி வெற்றி பெற்றது.

பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. “விருமன்,” “பொன்னியின் செல்வனை” அடுத்து “சர்தாரும்“ வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு டொயோடா கார் ஒன்றை கார்த்தி பரிசளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.